தென்னை விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக அரசு

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான “நீரா” பானத்தை இறக்கி, பதப்படுத்தி, விற்பனை செய்வதை அனுமதிக்கும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” தமிழ்நாட்டில் 8 கோடி தென்னைமரங்கள், 10 .74 லட்சம் ஏக்கரில் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.   அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தி மற்றும் தென்னை விவசாயத்தில் முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தென்னை விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
அந்த அடிப்படையில் தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான “நீரா” உற்பத்தி செய்ய அனுமதி வழங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நீரா என்பது, தென்னை மரங்களில் மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம் ஆகும். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத உடலுக்கு நன்மை செய்யும் இயற்கையான ஊட்டச்சத்து பானமாகும்.
நீரா பானத்தில் வைட்டமின் ஏ, பி, சி, அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவையான தாது உப்புக்களும் கிடைக்கிறது.  தென்னை வளர்ச்சி வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நொதி எதிர்ப்பு கலப்பதால் இந்த பானம்  நொதிக்காது.
ஒரு தென்னை மரத்தில் இருந்து தேங்காய் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும், நீரா பானம் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் தரும் என எதிர்பார்ப்பதாக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
1 . தென்னை வளர்ச்சி வாரியம், மற்றும் தமிழக அரசு அங்கீகரிக்கும் தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கம், தென்னை உற்பத்தியாளர் இணையம் மட்டுமே நொதி எதிர்ப்பு பயன்படுத்தி இந்த பானம்  உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
2 .இவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும் அனுமதி அளிக்கப்படும்
இதன் காரணமாக 1 .50 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள். 2 .40 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு மற்றும் துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இனி உங்கள் விந்தின் திறனை ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டறியலாம் : எப்படி

ஹார்வேர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது ஆண்கள் வீட்டில் இருந்தபடியே விந்தணு அல்லது கருவளத்தின் திறனை அறிய வழிவகுத்துள்ளது. இதற்கு உங்கள் ஸ்மார்ட்போனின் உதவி அவசியம்.

வெறும் ரூ.290யில்…
இதற்கான கருவிகள் பல ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்ற போதிலும். இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உருவாக்க வெறும் கூ4.45 தான் தேவைப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு வெறும் ரூ.290 தான்.

ஐந்தே நொடிகள்!
மேலும்இ இந்த கருவியின் மூலமாக ஒரு நபரின் விந்தணு திறனை ஐந்தே நொடிகளில் கண்டறிய முடியும். மேலும், இது விந்தின் நீந்தும் திறனை 98மூ சரியாக கூறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பயன்படுத்தும் முறை…
எளிதாக வெளியில் அகற்ற வசதியான சிப் கொடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்துபவர்கள் அவர்களுடைய 35 மைக்ரோலிட்டர் விந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பல்பு போன்ற வடிவில் இருக்கும் டியூப்பில் செலுத்த வேண்டும். பிறகு டிவைஸ்-ஐ ஸ்மார்ட் போனுடன் இணைக்க வேண்டும். இதன் மூலமாக விந்தின் திறனை ஐந்து நொடிகளில் அறிய முடியும் என ஹார்வேர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னேற்றம் தேவை…
இந்த ஆராய்ச்சியில் இன்னும் சில முன்னேற்றங்கள் தேவை என கூறப்படுகிறது. சில விடயங்களை கண்டறிவதில் இந்த கருவி தடுமாற்றம் காண்கிறது.

3 கோடி ஆண்கள்!
உலகளவில் மூன்று கோடி ஆண்களுக்கும் மேல் கருவள பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், நீரிழிவு நோயை போல், இதை எளிதாக ஆரம்பித்திலேயே கண்டறிந்தால், சரியான சிகிச்சை மூலம் தீர்வு காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகளுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் ஆதரவு

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் வாழும் தமிழர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள்

அவர்களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக விவசாயிகளுக்கு, தமிழகத்தில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, ஜெர்மனியில் உள்ள தமிழர்கள் அங்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள பிராங்பர்ட் நகரில், தமிழ் மக்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, விவசாயிகளுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.


இது குறித்து அங்குள்ள கோவையைச் சேர்ந்த ஜெர்மன்வாழ் தமிழரான ஷானவாஸ் கூறும்போது, தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட மக்கள் இங்கு பலர் உள்ளோம். அடிப்படையில் நாங்கள் பலரும் விவசாய பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால், விவசாயிகளுக்கு எங்களது ஆதரவைத் தெரிவிக்கொள்வதாகவும், விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றி, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, ஜெர்மனியிலும் அதற்காக குரல் கொடுத்த அவர்கள். விவசாயிகள் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
-சு. சீனிவாசன்

நடு ரோட்டில் பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி

திருப்பூர் அருகே உள்ள சோமனுர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிப்பு தெரிவித்து இன்று காலை முதலே பெண்கள் பொதுமக்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் பலத்த காயம் அடைந்த அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், சாமாளபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல், போலீஸார் தடியடி நடத்தியதில் சாமளாபுரத்தை சேர்ந்த சிவகணேஷ் என்பவரும், பலத்த காயம் அடைந்தார். அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸார் தடியடியில் படுகாயம் அடைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

பெண்ணை ஓங்கி அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன், தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரை பணிநீக்கம் செய்யவேண்டும், காயம்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தெ.பிரபாகரன் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியடைந்தத்து. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விற்பனையில் வேகம் காட்டும் Xiaomi Redmi Note 4

பட்ஜெட் ஸ்மார்ட் போன் சந்தையில் 4 GB RAM, 64 GB இன்டர்னல் மெமரி, தெளிவான கேமரா என பல வசதிகளைக் கொண்டு சரியான விலை நிர்ணயத்தில் இந்த மாத புதுவராவாக Xiaomi Redmi Note 4 சந்தையை அலங்கரிக்கிறது.

மேட் இன் இந்தியா லோகோவோடு Black , Gold , Silver என கண்ணைக் கவரும் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது Xiaomi Redmi Note 4.

Note 4 Black

சிறப்பம்சங்கள்:

* Xiaomi க்கே உரித்தான MIUI 8 உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஆண்டிராய்டு 6 .0.1 இயங்குதளம் பயன்படுத்த மிக எளிமை.

* 4100mah திறன் கொண்ட பேட்டரி என்பதால் ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக ஒன்றரை நாள் உபயோகிக்க முடியும். அதே சமயம் Fast Charging வசதி மிஸ்ஸிங்.

* Snapdragon 625 ப்ராசசர் மற்றவைகளைவிட 20 சதவீதம் குறைவான பேட்டரியை உபயோகித்து சிறந்த Multi tasking மற்றும் Gaming அனுபவத்தை அளிக்கிறது !

* துல்லியமாக இயங்கும் Finger Print சென்சார் 5 ரேகைகள் வரை பதிவு செய்து கொள்கிறது.

* விலைக்கேற்ற தரத்தில் 5 .5 இன்ச் Full HD Display என்பதால் வெய்யிலிலும் ஓரளவு தெளிவாக பார்க்க முடிகிறது.

* பகலில் தெளிவான படங்களை எடுக்கும் 13 MP முன்பக்க மற்றும் 5 MP பின்பக்க கேமிராக்கள் இரவில் சற்று ஏமாற்றத்தையே அளிக்கிறது.

* VoLTE இருப்பதால் ஜியோ வாடிக்கையாளர்கள் தனியாக Jio 4 G Voice application பயன்படுத்தவேண்டியது இல்லை.

* ஆரம்பம் முதல் ஆன்லைனில் நொடிகளில் விற்றுப்போகும் “நோட் 4” கடந்த சில நாட்களாக வெளிச்சந்தையில் 100 முதல் 500 ரூபாய் வரை விலை வித்தியாசத்தில் கிடைக்கிறது.

மொத்தத்தில் Lenovo, Motorola மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பத்தாயிரம் முதல் பதினையாயிரம் ரூபாய் ஸ்மார்ட்போன் Segment ல் கொடுக்கும் காசுக்கு நிறைய அம்சங்களை அளித்து இந்த மாதத்தின் சிறந்த ஸ்மார்ட் போனாக நடை போடுகிறது Xiaomi Redmi Note 4 !

விலை 9999 முதல் 12999 வரை.

– நிர்மல் அஷ்வின்சாரதி

இனி உங்கள் விந்தின் திறனை ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டறியலாம் : எப்படி?

ஹார்வேர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது ஆண்கள் வீட்டில் இருந்தபடியே விந்தணு அல்லது கருவளத்தின் திறனை அறிய வழிவகுத்துள்ளது. இதற்கு உங்கள் ஸ்மார்ட்போனின் உதவி அவசியம்.

வெறும் ரூ.290யில்…
இதற்கான கருவிகள் பல ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்ற போதிலும். இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உருவாக்க வெறும் கூ4.45 தான் தேவைப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு வெறும் ரூ.290 தான்.

ஐந்தே நொடிகள்!
மேலும்இ இந்த கருவியின் மூலமாக ஒரு நபரின் விந்தணு திறனை ஐந்தே நொடிகளில் கண்டறிய முடியும். மேலும், இது விந்தின் நீந்தும் திறனை 98மூ சரியாக கூறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பயன்படுத்தும் முறை…
எளிதாக வெளியில் அகற்ற வசதியான சிப் கொடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்துபவர்கள் அவர்களுடைய 35 மைக்ரோலிட்டர் விந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பல்பு போன்ற வடிவில் இருக்கும் டியூப்பில் செலுத்த வேண்டும். பிறகு டிவைஸ்-ஐ ஸ்மார்ட் போனுடன் இணைக்க வேண்டும். இதன் மூலமாக விந்தின் திறனை ஐந்து நொடிகளில் அறிய முடியும் என ஹார்வேர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னேற்றம் தேவை…
இந்த ஆராய்ச்சியில் இன்னும் சில முன்னேற்றங்கள் தேவை என கூறப்படுகிறது. சில விடயங்களை கண்டறிவதில் இந்த கருவி தடுமாற்றம் காண்கிறது.

3 கோடி ஆண்கள்!
உலகளவில் மூன்று கோடி ஆண்களுக்கும் மேல் கருவள பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், நீரிழிவு நோயை போல், இதை எளிதாக ஆரம்பித்திலேயே கண்டறிந்தால், சரியான சிகிச்சை மூலம் தீர்வு காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜியோவின் இலவச சேவைகளுக்கு டிராய் வைத்த செக் ;;

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வொர்க் சேவைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மார்ச் 31-ந்தேதி வரை அதன் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் ஜியோ கட்டண சேவைகள் பிரைம் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், ஜியோ பிரைம் திட்டத்தில் சேர கடைசி நாள் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டதுடன், ஜியோ சேவைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த ஆறு மாதங்களாக இலவசமாக வழங்கி வந்த சேவைகள் மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவித்திருந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ‘சம்மர் சர்ப்ரைஸ்’ (Summer Surprise) என்ற புதிய சலுகை அறிவிக்கப்பட்டதும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் இணையத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்திய தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஜியோ-வின் இந்த ‘சம்மர் சர்ப்ரைஸ் பேக்கை’ கைவிடுமாறு கூறியுள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி கடல்நீரை குடிநீராக்கலாம்: புது டெக்னிக் கண்டுபிடிப்பு!

தற்போது உலக நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினையாக குடி நீர்த்தட்டுப்பாடு காணப்படுகின்றது.

இப் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரை குடி நீராக்கும் திட்டமே முன்வைக்கப்படுகின்றது. எனினும் இது சில நாடுகளில் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில் கடல் நீரை குடி நீராக மாற்றக்கூடிய புதிய சேர்வை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மிகவும் வினைத்திறனான முறையில் கடல் நீரை குடிநீராக்கும் இந்த சேர்வையானது ஃரபீன் ஆக்ஸைட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள மான்ஸ்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.

கடல் நீரிலுள்ள உப்பினை நீக்கும் பொறிமுறையின் ஊடாகவே இது குடிநீரினை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த விஞ்ஞானிகள் குழு சேர்வையின் வினைத்திறனை மென்மேலும் அதிகரிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதனால் இத் தொழில்நுட்பமானது அறிமுகம் செய்யப்படுவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்லச்??”

ஒரு மாறுபட்ட அடக்குமுறை ஈழ நாட்டில் வேரூன்ற தொடங்கியுள்ளது. இதனை அடக்கு முறை என்பதை விடவும் அழிப்பு முறை என்று சொல்வதே பொருத்தம்.

இருந்த நிலை மாற்றப்பட்டு வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு, அங்கு ஓர் செயற்கையான கலாச்சாரம் ஏற்படுத்துவதனையும், உட்புகுத்துவதனையும் புதுவித ஆக்ரமிப்பு படலமாக மட்டுமே நோக்க முடியும்.

அப்படிப் பார்க்கும் போது இதனையும் கூட ஒரு வகையில் இன அழிப்பு பட்டியலுக்கும் அடக்கிவிட முடியும். அதற்கான ஓர் அடித்தளமாகவே பலவந்தமான ஓர் கலாச்சாரத் திணிப்பு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது இப்படியே தொடருமானால் “தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்ல சாவார்கள்” என்ற பதம் மட்டும் உண்மையாகி விடக்கூடிய சூழலில் இலங்கைத் தமிழர்கள் நிலை தற்போது பயணித்துக் கொண்டு வருகின்றது.

உலகத் தமிழர்களைப் பொருத்தவரைக்கும் கூட இலங்கை என்பது மிகப் பிரதானமான நாடு. அதில் இருந்து முற்றாக தமிழர்களை அகற்றி விட இலங்கை பௌத்த அமைப்புகள் தரப்பு ஆட்சியாளர்களோடு இணைந்து காட்டும் முனைப்பு என்பது வேடிக்கையான விடயமே.

இருந்தாலும் அதனை செயற்படுத்தியே தீர வேண்டும் என்பது ஒரு நிகழ்ச்சி நிரலாகவே அரங்கேற்றப்பட்டு கொண்டு வருகின்றது. இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது, எத்தகைய மாற்றங்களை இலங்கை சந்தித்து வந்தது என்பது தெளிவாகப் புலப்படும்.

வரலாற்றில் எத்தனை புதுக் கதைகள் திணிக்கப்பட்டுள்ளன, எத்தனை மாற்றுக் கருத்துகள் பதியப்பட்டன என்பதனை தமிழர்கள் மட்டுமல்ல பௌத்தர்களும் கூட நன்றாகவே அறிவார்கள். வரலாற்றை பொய்யாக்குவதில் பெயர் பெற்றது இலங்கை.

இப்படியாக வரலாற்றை அழிப்பதாலோ, அல்லது திரிபு படுத்தப் படுவதாலோ தமிழர்கள் இலங்கையில் பெற்றுள்ள முக்கியத்துவத்தினை மாற்றி விட முடியாது என்பதனை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்ட காரணத்தினாலேயே இலங்கையில் செயற்கை கலாச்சார திணிப்பு முனைப்பு காட்டப்பட்டு வருகின்றது.

இதன் இலக்கு இலங்கை முற்று முழுதான ஓர் பௌத்த நாடாக மாற வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கும் பௌத்த வசமாக வேண்டும் என்பது மட்டுமே.

அந்த வகையில் வடக்கு கிழக்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று கொண்டே இருக்கின்றது.

இந்த விடயத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் சாமர்த்தியமான யுக்தியை கடைபிடித்து ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தாலும் தனது உடும்புப் பிடி மட்டும் எது நடந்தாலும் தளர்த்திக் கொள்ள வில்லை.

இந்த இடத்தில் மலையத்திலும் தமிழர்கள் தானே இருக்கின்றார்கள் அவர்களை ஏன் விட்டு விட்டார்கள்? இந்தக் கேள்வி கட்டாயம் வரக்கூடும்.

மலையகத் தமிழர்கள் ஒரு வகையில் ஓர் அடக்கு முறை வாழ்வுக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். ஆனால் தமிழீழ தமிழர்கள் அந்த அடக்கு முறையை எதிர்த்தனர்.

உரிமைக்காக குரல் கொடுத்தனர். ஆரம்ப கட்டத்தில் அகிம்சை வழியிலும் கூட உரிமைக்காக கேள்வி எழுப்பிப்பார்த்தனர். அதில் கிடைக்கப்பெற்றது ஒன்றும் இல்லை என்றாகிப் போகவே ஆயுதம் ஏந்தியும் தம் உரிமைக்காக போராடத் தொடங்கினர்.

இவை அனைத்துமே தெரிந்த கதை ஆனால் இதில் தோற்றது இலங்கையின் ஆட்சியாளர்களே என்பதும் ஒரு வகையில் உண்மையே.

எந்த நிலையிலும் தமிழர்களையும், அவர்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்தினை அழித்து ஒடுக்கி விட முடியாது என்பதனை அறிந்து கொண்ட காரணத்தினால் ஒரு மாறுபட்ட அழிப்பு முயற்சி இலங்கையில் தொடரப்பட்டுள்ளது.

இந்த முயற்சி இரு வகையில் தொடரப்பட்டுள்ளது. அதாவது தமிழர் பிரதேசங்களில் பௌத்த கலாச்சாரத்தை திணிப்பது ஒன்று, இரண்டாவது தமிழர் வழிபாட்டு தலங்களுக்குள் பௌத்தத்தை புகுத்துவது.

இந்த இரு வகை செயற்பாடுகள் இலங்கையில் நடைபெற்று கொண்டு வருவதனை அனைவராலும் உணரக் கூடியதாகவே இருக்கின்றது. கதிர்காமக் கந்தன் “கத்தரகம தெய்யோவாக” மாற்றம் பெற்றதை எவரும் உணரவில்லை.

விசாகத் திருவிழா “வெசக்” பண்டிகையாக திரிந்து போனதையும் கண்டு கொள்ள வில்லை. இது போல எத்தனை மாறுதல்கள்!. தானத்திற்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை நிருவ இத்தனை விட்டுக் கொடுப்புகள் கொஞ்சம் அதிகம் தான்.

இப்போதைக்கு முருகக் கடவுள் இலங்கையைப் பொருத்தவரை பௌத்தக் கடவுளாக்கப்பட்டு விட்டார். இது அறிந்த காரணத்தினாலோ தெரியவில்லை ஆண்டியாய் மாறினார் அப்போதே கந்தன்.

“கதிர்காம வெற்பில் உறைவோனே!
சோதி சிவஞானக் குமரேசா தோமில் கதிர்காமப் பெருமானே!
கதிரகாம மூதூரில் இளையோனே!’
அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே!’
மணிதரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாளே!’
கதிர்காம மேவிய பெருமாளே”

திருப்புகழ் ஊடாக அருணகிரிநாதர் பாடியது இது. புராணங்களின் அடிப்படையிலும் சரி, வரலாற்றின் அடிப்படையிலும் சரி கதிர்காமம் இந்துக்களின் ஆலயம் எனப்படுவதே உண்மை.

கதிர்காமம் மட்டுமல்ல பல வழிபாட்டுத்தலங்களுக்கு ஏற்பட்டதும் இதே கதியே. பௌத்த விகாரைகளுக்குள் இந்துக் கடவுள்கள் இல்லாத இடம் குறைவு.

இங்கு கடவுள்களிடம் வேறுபாடு காண முயலவில்லை. இன ரீதியில் வேற்றுமையையும் நோக்கவில்லை. இதன் உண்மைத் தன்மையை ஆராயும் போதே மாற்றத்தின் விளைவு புரிகின்றது.

அதாவது திட்டமிட்ட வகையில் ஓர் இன அழிப்பினை இலங்கை துளித்துளியாக சேமித்து வருகின்றது. இதே நிலை தொடருமானால் அது பிரளயமாக மாறக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.

இப்போதைய சூழலின் அருகிவரும் பட்டியலில் தமிழர்களையும் அடக்கி விட முடியும். இதில் வேடிக்கையான விடயம் எதுவெனில் நம் பண்பாடுகளும், சமய நம்பிக்கைகளும், கலாச்சாரமும் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதை தமிழர்களும் அறியாமல் இல்லை என்பதே.

அறிந்து என்ன பயன் கேள்வி கேட்பவன் இனவாதி, தட்டிக் கேட்பவன் விடுதலைப்புலி என்ற ஓர் சிந்தை வடிவமைப்பினை சிறப்பாக சித்தரித்து விட்டார்கள் ஆரம்ப காலம் முதல் ஆண்டு வந்த ஆட்சியாளர்கள்.

இப்போது மட்டும் நல்லிணக்கம், கலாச்சார பாதுகாப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஆட்சியாளர்கள் தெரிவித்தாலும் அது நடைமுறையில் இருக்கின்றதா? இது மிகப்பெரிய கேள்விக் குறியே.

தமிழ் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வில்லை என்பதே உண்மை. அது எப்படி முடியும் அப்படி பாதுகாத்து விட்டால் ஆண்டாண்டுகளாக இலங்கை ஆட்சியாளர்கள் செய்து வந்த பிரம்ப பிரயத்தனம் தோல்வியை சந்தித்து விடுமே.

எது எப்படியோ இந்த செயற்கை கலாச்சாரத் திணிப்பிற்கு மத்தியில் தமிழர்கள் தமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காமல்.,

தமது வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வந்தால் மட்டும் “தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்ல சாவார்கள்” என்ற பதத்தை பொய்யாக்க முடியும்.

அப்படியும் இல்லாவிடின் எது நடந்தால் நமக்கென்ன என்று தமிழர்கள் இருப்பார்களானால் அதனைத் தொடர்ந்து நடக்கப்போவது தமிழர்களுக்கு என்று இன்னோர் கிரகத்தில் தான் இடம் தேட வேண்டி வரும் என்பதே.

பெண்கள் ஹாக்கி போட்டி இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி வெஸ்ட் வான்கூவர் ;;

பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் 2-வது சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

கனடாவில் உள்ள வெஸ்ட் வான்கூவர் நகரில் பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் போட்டியின் 2-வது சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெலாரஸை எதிர்கொண்டது. இப்போட்டியின் ஆரம்பம் முதலே பெலாரஸ் மீது இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ராணி, 20 மற்றும் 40-வது நிமிடங்களில் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை அதிகப்படுத்தினார். 58-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் மேலும் ஒரு கோலை அடிக்க, இந்திய அணி 4-0 என்ற கோல்கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிலியை எதிர்த்து ஆடவுள்ளது. முன்னதாக நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சிலி அணி 2-1 என்ற கோல்கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

NOT JUST A NEWS CHANNEL ….ITS A KNOWLEDGE HUB